செவ்வாய், 3 நவம்பர், 2015

துணுக்குகள் !! உங்களின் கனிவான கவனத்திற்கு !!





பிஸ்மில்லாஹிர்-ரஹ்மானிர்-ரஹீம் !!



அஸ்ஸலாமு அலேக்கும் !!



அல்லாஹூ-அக்பர்-அல்லாஹ் !!

உலகம் முழுவதும் வாழ்ந்துவரும் 

என் அன்புத் தமிழ் நெஞ்சங்களே !!

வணக்கம் உங்கள் அனைவருக்கும்.

சிரித்து வாழ வேண்டும். பிறர் சிரிக்க 

வாழ்ந்திடாதே. இதுதான் கவிஞரின் 

வாசகங்கள். எனக்கும் இதில் நிரம்ப 

உடன்பாடுதான். உங்களுக்கு எப்படி ?

கீழே உள்ள ஜோக்குகளை படிங்க. சிரிங்க.

*****************************************பொண்டாட்டி :-  ஏங்க !! உங்களுக்கு 

கொஞ்சமாச்சும்   அறிவு இருக்கா ?

கணவன் :- ( மனசுக்குள்-- உம்...அது இருந்தா 

ஏண்டிஅடி ராட்ச்சசி, உன்னையப் 

போய் ஏண்டி நான்கண்ணாலம் 

கட்டிக்கப்போறேன் ?) ஏன் தங்கம்

எதுக்கு அத நீ இப்ப கேக்குறே ?


பொண்டாட்டி :-  ஆமா...நான் குளிக்க 

போயிருந்தப்போ நம்ம வீட்டுல வேலை 

செய்ற வேலைக்காரி விஜயாவை 

கையைப்பிடிச்சு இழுத்து கட்டிப்புடிக்க 

பாத்தீங்களாமே !! இது உங்களுக்கே 

நல்லா இருக்கா ? இல்ல கேக்குறேன்.


கணவன் :- இப்ப அழுது என்னடி பிரயோஜனம் ? 

நான் அப்பவே சொன்னேன். உனக்கும் 

அவளுக்கும் ஒரே கலர் ஒரே டிசைன்ல சேலை 

எடுக்காதடி எடுக்காதடின்னு படிச்சு படிச்சு 

சொன்னேன். நீ அப்போ கேக்கலே. இப்ப 

குந்திக்கினு அழுதா, அதுக்கு நான் இன்னாடி 

செய்யறது ? உம்...இல்ல..கேக்குறேன்....


( இது எப்படி இருக்கு )


நன்றி !! வணக்கம் !!


அன்புடன். திருமலை.இரா.பாலு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக