சனி, 13 செப்டம்பர், 2014

கண்டிப்பாக வயது வந்தவர்களுக்கு மட்டும் உள்ள சிரிக்கும் இடம் இது !!






    


                                 சி  ரி  ப்   பு  !!







லண்டன் மாநகரில் நடந்ததோர் 


உண்மைச் சம்பவம் இது !!



ஜேம்ஸ் & காத்தரின் இந்த ஜோடிகளுக்கு 


மொத்தம் நான்கு ஆண்பிள்ளைகள். 


ராபர்ட்,ஜாய்,ஜேக்கப், & ஆடம். 


இதில் கடைசி மகனான ஆடம் மட்டும் நிறம் 


கொஞ்சம் கம்மி. மற்றவர்கள் மூவரும் 


அவரவர்கள் அம்மா,அப்பா மாதிரி நல்ல 


வெள்ளைநிறம். இதில்ஜேம்ஸ்க்கு தனது கடைசி 


மகனான ஆடம்மின்  பிறப்பில்  கொஞ்சம் 


சந்தேகம் உண்டு தனது ஆசைமனைவியின் மீது. 


இருந்தாலும்அதனைவெளியில் காட்டிக்கொள்ள


வில்லை. காலங்கள் கடந்தன.நம் கதையின் 


நாயகன் ஜேம்ஸ்க்கு வயது மூப்பினால் 


நோய்தொற்றுஆகியது.இரத்தப்புற்றுநோயினால் 

அவன் அதிகம் பாதிக்கப்படுகின்றான். காப்பாற்ற 


முடியாத நிலைக்கு வந்தவுடன், மனைவியிடம் 


பேசுகிறான்.


ஜேம்ஸ் :-  காத்தரின்....


காத்தரின் :-  என்னங்க..கூப்பிட்டீங்களா ?


ஜேம்ஸ்:-  நான் இன்னும் கொஞ்சநேரத்தில் இந்த 


பூவுலகத்தைவிட்டுப் போய் விடுவேன். எனக்கு 


நம் குழந்தைகளில் கடைசி குழந்தையான 


ஆடம் பிறப்பினைபற்றி சந்தேகம் உண்டு 


காத்தரின். அதை நீயாக தீர்த்துவிட்டால் நான் 


நிம்மதியாக கர்த்தரிடம் சென்று அடைக்கலம்


ஆகிவிடுவேன். நான் கேட்கும் கேள்விக்கு நீ 


சத்தியமாகஉண்மையைஒளிக்காமல் 


மறைக்காமல் சொல்லிவிடு. ஆடம் எனக்குப் 


பிறந்த மகனா ?


காத்தரின்:- சத்தியமாக சொல்கிறேன் கர்த்தரின் 


மீது ஆணையிட்டு சொல்லுகிறேன் ஆடம் 


உங்களுக்குப் பிறந்தவன்தான். இது 


உண்மை.சத்தியம்.தேவன்மேல்


ஆணையிடுகிறேன்.


(இப்படி காத்தரின் சொன்னவுடன் நிம்மதியாக 


ஒரு பெருமூச்சினை விட்டுவிட்டு ஜேம்ஸ் தனது 


மூச்சினை நிரந்தரமாக வெளியிடுவதை 


நிறுத்திக்கொண்டான்.)


காத்தரின் :- (தனது மனசுக்குள்) 


அப்பாடி..நல்லவேளை...தப்பித்தேன். 


முதல் மூன்று மகன்களைப்பற்றி எதுவும் 



கேட்காமல் விட்டு விட்டாரே அவர் என்றாள்.  


( இது ..எப்படி ...இருக்கு ...)(உலகம் படு மோசம்டா)                                               


நன்றி !! வணக்கம் !!                                                           



அன்புடன். மதுரை T.R. பாலு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக